தூத்துக்குடி செப், 25
நெல்லை-சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட மக்களும் பயன்பெறும் வகையில் கோயில்பட்டி ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்த வேண்டும் என பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திய நிலையில், இன்று மதிமுக சார்பில் ரயிலை நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.