புதுடெல்லி செப், 24
11 மாநிலங்களுக்கான 9 புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று மதியம் 12:30 மணிக்கு காணொளி வாயிலாக தொடங்கி வைக்கிறார். அதன்படி “நெல்லை-சென்னை, உதய்பூர்-ஜெய்ப்பூர், ஹைதராபாத்-பெங்களூரு, விஜயவாடா-சென்னை, பாட்னா-ஹவுரா, காசர்கோடு-திருவனந்தபுரம், ரூர்கேலா-பூரி, ராஞ்சி-ஹவுரா, ஜாம்நகர்-அகமதாபாத் ஆகிய ரயில்களின் சேவையை நாட்டு மக்களுக்கு அவர் அர்ப்பணிக்கிறார்.