சென்னை செப், 21
கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட இந்த படம் தற்போது தூசி தட்டி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை தீபாவளி அன்று வெளியிட பட குழுத்திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.