சென்னை செப், 21
இந்தியாவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக சர்வதேச காண்டாமிருக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக காண்டாமிருக தினத்தை முன்னிட்டு வெளியான இந்த அறிக்கையில் இந்தியாவில் 3,262 காண்டாமிருகங்கள் உள்ளன. பாதுகாக்கும் மேலாண்மை ஒப்பந்தம், வனவிலங்கு பாதுகாப்பு சட்டங்கள் மூலம் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது என தெரியவந்துள்ளது.