துபாய் செப், 6
ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜாவில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க அமீரகப்பிரிவு நிர்வாகிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க அமீரகப் பிரிவு நிர்வாகிகளான முதுவை ஹிதாயத், திண்டுக்கல் ஜமால் முஹைதீன், தஞ்சை மன்னர் மன்னன், கட்டுமாவடி பைசல் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பல்வேறு சமூக சேவைகள் பற்றி விவாதித்தனர்.
மேலும் துபாயில் தமிழ்க்குடில் என்ற அமைப்பின் மூலம் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் பணிப்பெண்களுக்கு தன்னார்வத்துடன் உதவி வரும் தமிழ்குடி அமைப்பின் நிறுவனர் மஹாதேவனை சந்தித்து வாழ்த்துக்களை கூறினர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.