சென்னை செப், 6
காவிரி நீர் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடகா அரசுக்கும் தமிழக அரசுக்கும் நீண்ட காலமாக பிரச்சினை நீடித்து வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கான நதிநீர் பங்கை கர்நாடகா வழங்க மறுப்பதாக கூறி தமிழக அரசு ஆகஸ்ட் 14ம் தேதி மனு தாக்கல் செய்தது இதனை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்கிறது.