புதுடெல்லி செப், 6
புதுடெல்லியில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ள பாரத் மண்டபத்தின் முன் உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டது. சோழர் காலத்தில் பின்பற்றப்பட்ட சிற்ப சாஸ்திரப்படி தமிழகத்தின் சுவாமி மலையை சேர்ந்த பாரம்பரிய சிற்பிகள் இந்த சிலையை உருவாக்கியுள்ளனர். தாண்டவ நடனத்தில் சிவன் இருப்பது போன்ற இந்த சிலை 27 அடி உயரமும் 20 டன் எடையும் கொண்டது. இதற்காக எட்டு தனிமங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.