கேரளா செப், 6
கேரள முதல்வர் பினராயி விஜயன் மீதான லஞ்ச புகார் குறித்து விசாரணை நடத்த கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் தாது மணல் நிறுவனத்திற்கு அனுமதி அளிக்க முதல்வர் தனது மகள் மூலமாக ஒரு கோடியை லஞ்சமாக பெற்றதாகவும் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க உத்தரவிடுமாறு கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அம்மாநில சட்டப்பேரவையில் விவகாரத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.