ஸ்ரீஹரிகோட்டா செப், 5
ஆதித்யா எல்-1 விண்கலம் இரண்டாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு மாற்றப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. சூரியனை ஆய்வு செய்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை, பிஎஸ்எல்விசி-57 ராக்கெட் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. பூமியிலிருந்து 648 கிலோமீட்டர் உயரத்தில் பூமியின் முதல் சுற்றுவட்ட பாதையில் விண்கலம் நிறுவப்பட்டது.