புதுடெல்லி செப், 3
2047 ம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தில் வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுக்கும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் தலைமையின் கீழ்க்கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு இந்தியரும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்றி வருகின்றனர். பிரதமர் மோடியின் அமிர்த பெருவிழா மூலம் நாட்டு மக்களிடையே தேச பக்தி உணர்வு மீண்டும் எழுச்சி பெற்று இருக்கிறது எனவும் அவர் கூறியுள்ளார்