சென்னை ஆக, 29
பொறியியல் துணை கலந்தாய்வுக்கு செப்டம்பர் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கலந்தாய்வு நடைபெற்ற நிலையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. இதை அடுத்து துணைக் கலந்தாய்வுக்கு பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 6 முதல் 8 வரை ஆன்லைனில் துணை கலந்தாய்வு நடத்தப்படும்.