சென்னை ஆக, 21
நீட் தேர்வை அரசியல் ஆக்கி திமுகவினர் குளிர் காய நினைப்பது அப்பட்டமாக தெரிகிறது என்று பாரதிய ஜனதா கட்சி சட்ட மன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார். திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக பேசிய அவர், “தமிழகத்தில் 69% இட ஒதுக்கீட்டின்படியே மருத்துவ மாணவர் சேர்க்கை நடக்கிறது. அதிமுக அரசு அதை அதிமுக அரசு கொண்டுவந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு கிராமப்புற மாணவர்களுக்கு வரமாக அமைந்துள்ளது” என்றார்.