திருச்சி ஆக, 21
திருச்சியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் ஆசிரியர்களின் பதவி உயர்வு தகுதி தேர்வில் தேர்ச்சி கட்டாயம் இல்லை. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தினை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தலைமை செயலகத்தை நோக்கி செப்டம்பர் 29ம் தேதி 10,000 ஆசிரியர்கள் பேரணி செல்ல முடிவு செய்துள்ளனர்