புதுடெல்லி ஆக, 17
பூமி வெப்பமயமாதலை கண்காணிக்க புதிய செயற்கைக்கோள்களை நாசா விண்ணில் செலுத்த உள்ளது. ஆர்டிக் மற்றும் அண்டார்டிகாவில் தனது சோதனை மையங்களை நிறுவி வெப்பம் குறித்து கண்காணித்து வருகிறது. இந்நிலையில் புதிய செயற்கை கோள்கள் மூலம் பனிக்கட்டி உருகுதல் மற்றும் கடல் மட்ட உயர்வு ஆகியவை குறித்து துல்லியமான கணிப்புகள் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து அறிய உள்ளதாக நாசா ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.