கர்நாடகா ஆக, 18
சந்திராயன்-3 ஏவதலுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் திருப்பதி கோயிலுக்கு சென்றனர். இதனை கர்நாடகாவைச் சேர்ந்த சில எழுத்தாளர்கள் விமர்சித்தனர். இதற்காக சமீபத்தில் அவர்களுக்கு மிரட்டல் கடிதம் வந்தது. விமர்சிக்கும் நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்பது தான் அந்த கடிதத்தின் சாராம்சம். இந்த விவகாரத்தை கர்நாடக மாநில உள்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல எழுத்தாளர்கள் முடிவு செய்துள்ளனர்.