திருச்சி ஆக, 14
சிறப்பாக செயல்படும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விருது வழங்கப்படும். அதன்படி சிறந்த மாநகராட்சியாக திருச்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது. நகராட்சியில் ராமேஸ்வரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. நாளை நடைபெறும் சுதந்திர விழா நிகழ்ச்சியில் இதற்கான விருது வழங்கப்பட உள்ளது.