திருவள்ளூர் ஆக, 14
சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று இரவு இடியுடன் ஆரம்பித்த மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது. மழை காரணமாக சென்னையில் பல இடங்களில் நீர் தேங்கி நிற்கிறது. இந்த நிலையில் அடுத்த மூன்று, நான்கு மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.