சென்னை ஆக, 14
2023ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நல்ல ஆளுமைகள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மகப்பேறு இறப்பை குறைத்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்திய அருண் தம்புராஜு, மாணவர்களிடையே பாலியல் குற்றத்தடுப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய கோவை எஸ்பி பத்ரி நாராயணன், ஆதரவற்ற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த சென்னை மருத்துவக் கல்லூரியின் டீன் தேரணி ராஜன் உள்ளிட்டோருக்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டுள்ளது