மாமல்லபுரம் ஆக, 13
தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா மாமல்லபுரத்தில் நேற்று தொடங்கியது. சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் விழாவை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தொடங்கி வைத்தார். இந்த திருவிழா ஆகஸ்ட் 15ம் தேதி வரை தினமும் மதியம் 12 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும் பார்வையாளர்களுக்கு பிரத்தியேகமாக கலை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.