புதுடெல்லி ஆக, 12
இந்திய எல்லையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்க மற்றும் இரு முறைகளில் இருந்து வரும் எதிரிகளின் தாக்குதலை சமாளிக்க ஏதுவாக நவீன வசதி கொண்ட MiG- 29 ரக போர் விமானம் ஸ்ரீநகர் விமானப்படை தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர் கண்காணிப்பு பணியில் MiG -29 விமானம் ஈடுபட உள்ளது.