ஸ்ரீஹரிகோட்டா ஆக, 10
நிலவின் ஈர்ப்பு விசைக்குள் பயணித்து வரும் சந்திராயன் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவைக் குறைக்கும் இரண்டாம் கட்ட முயற்சியை வெற்றிகரமாக மேற்கொண்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சந்திராயன் 3 கடந்த மாதம் 14 ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது புவி வட்டப்பாதையில் வலம் வந்த அந்த விண்கலம் கடந்து 1ம் தேதி நிலவை நோக்கிய பாதைக்கு மாற்றப்பட்டது வரும் 23ம் தேதி நிலவில் சந்திராயன் 3 தரையிறக்கப்பட உள்ளது