சென்னை ஆக, 10
வெளிநாடுகளுக்கு புழுங்கல் அரிசி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்யாமல் இருப்பதால் மூன்று மாதங்களில் மேலும் அரிசி விலை உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் புழுங்கல் அரிசி கிலோவுக்கு ரூபாய் 15 வரை விலையேற்றம் கண்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து புழுங்கல் அரிசியை ஏற்றுமதி செய்ய தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளனர்.