கோவை ஆக, 9
கோவை குறிச்சி குளக்கரையில் தமிழ் எழுத்துகளால் செய்யப்பட்ட 20 அடி உயரம் கொண்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியானது 300க்கும் மேற்பட்ட தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்ட திருவள்ளுவரின் சிலையை அமைத்திருக்கிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக எழுத்துக்களால் இவ்வாறு வடிவமைக்கப்பட்ட முதல் சிலை இதுவாகும்