கோவை ஜூலை, 16
தமிழகத்திற்கு ரயில்வே மேம்பாட்டிற்காக அரசு 6000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் முருகன் தகவல் தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர் காங்கிரஸ் திமுக கூட்டணி ஆட்சியின்போது தமிழக ரயில்வேக்கு 800 கோடி மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போதைய மத்திய அரசு தமிழகத்திற்கு ரயில் மேம்பாட்டுக்காக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.