கோவை ஜூலை, 5
கோவையில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 4 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியான விவகாரத்தில் ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் கல்லூரி சுற்றுச்சூழல் இடிந்து விழுந்ததில் நான்கு புலம்பெயர் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த இரண்டு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக கட்டட ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.