சென்னை ஆக, 8
புழல் சிறையிலிருந்து அமலாக்கத்துறை விசாரணைக்காக செந்தில் பாலாஜி அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சென்னை முதன்மை அவர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து புழல் சிறைக்கு விரைந்து அமலாக்கத்துறை நீதிமன்ற நகலை சிறை நிர்வாகத்திடம் காண்பித்து ஐந்து நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்துச் சென்றது.