புதுக்கோட்டை ஆக, 4
புதுக்கோட்டை ஆலங்குடியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலையின் நடைபயணத்தில் பல்வேறு சுவாரஸ்யமான சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அம்பு ஆற்றுப்பாலத்தில் பாஜகவை சேர்ந்த இஸ்லாமியர் ஒருவர் புனித குர்ஆன் எழுத்துக்களை நினைவு பரிசாக வழங்கினார். பின்பு ஆதரவற்றவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் கணேசனை அண்ணாமலை சந்தித்து வாழ்த்து பெற்று தேவையான உதவிகளை செய்வதாக உறுதியளித்தார்.