தென்னாபிரிக்கா ஆக, 4
ஆகஸ்ட் 22 முதல் 24ம் தேதி வரை தென்னாப்பிரிக்கா நடத்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். தென்னாப்பிரிக்கா அதிபர் ராமபோசா தொலைபேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி மாநாட்டில் பங்கேற்பதற்காக பயணிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்தார்.