சென்னை ஜூலை, 30
நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகஸ்ட் 4ம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மேலும் ஐந்து தொகுதிகளை கேட்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் காங்கிரஸ் மாநில தலைவர் தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.