சென்னை ஜூலை, 27
ராஜேஷ் இயக்கத்தில் வெளியான பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து உருவாக உள்ள இந்த படத்திலும் நடிகர்கள் ஆர்யா, சந்தானம் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிய முடிகிறது. பாஸ் 2 என்ற தலைப்பு காமெடி கதை களத்தில் உருவாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.