சென்னை ஜூலை, 26
2023-24 கல்வி ஆண்டு முதல் புதிய மாதிரி பாடத்திட்டார் நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். பல்கலைக்கழக தன்னாட்சிக் கல்லூரிகளின் தன்னாட்சி உரிமைக்கு பாதிப்பில்லாத வகையில் புதிய மாதிரி பாடத்திட்டம் உருவாக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், உயர்கல்வி நிறுவனங்களுக்கு இடையே இடமாறுதல் கோரும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் பாடத்திட்டம் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.