மும்பை ஜூலை, 27
மகாராஷ்டிரா மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்து பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை பெய்து வருகிறது. மிக கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், கனமழை எச்சரிக்கை எதிரொலியாக, மும்பையில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.