சென்னை ஜூலை, 22
இளநிலை பொறியியல் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. அரசு பள்ளிகளில் படித்து 7.5% உள் ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்கள் சிறப்பு பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும் நாளையும் நடத்தப்பட உள்ளது.