புதுடெல்லி ஜூலை, 24
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 32 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து 76 எடுத்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற இன்னும் 289 ரன்கள் தேவைப்படுகிறது. இன்று நடைபெறும் கடைசி நாள் ஆட்டத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி சார்பில் அஸ்வின் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.