புதுச்சேரி ஜூலை, 24
கன மழை பெய்ய உள்ளதால் புதுச்சேரியின் மாஹே பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரபிக் கடலை ஒட்டியுள்ள பல பகுதிகளில் கன மழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதைத் தொடர்ந்து கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இன்னும் பல மாவட்டங்கள் பட்டியலில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.