சென்னை ஜூலை, 24
இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் பச்சமுத்து தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2019 ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இவர் திராவிட முன்னேற்ற கழக சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். பின்னர் 2021 ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மையக் கூட்டணியில் இணைந்தார். தற்போது அவர் பாரதிய ஜனதா கட்சியுடன் நெருக்கம் காட்டி அவர்களது கூட்டணியில் இணைந்திருக்கிறார்.