அமெரிக்கா ஜூலை, 22
டெஸ்லா பங்குகளின் பெரும் வீழ்ச்சியால் உலகின் சக்தி வாய்ந்த தொழிலதிபரான எலான் மாஸ்க் ஒரே நாளில் 1.64 லட்சம் கோடியை இழந்துள்ளார். அமெரிக்க பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்களால் டெஸ்லாவின் விலை 9.7 சதவீதமாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அவரது சொத்து நிகர மதிப்பு $234.4 பில்லியனாக குறைந்துள்ளதாக ப்ளூம்பெர்க் பில்லியனர்ஸ் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறார்.