சென்னை ஜூலை, 22
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தொழில்துறை உட்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. அத்துடன் மகளிருகாண பிரத்யோகமாக செயல்படுத்தப்பட உள்ள ரூபாய் ஆயிரத்திற்கான உரிமை தொகை, ஆளுநர் விவகாரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.