சென்னை ஜூலை, 19
2024ல் புதிய இந்தியா உருவாகும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை முடித்து பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய அவர் பாரதிய ஜனதா கட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதாகவும், யார் ஆட்சியில் இருக்க கூடாது என்பதுதான் கூட்டணியின் கொள்கை என்று கூறிய அவர் இந்திய ஜனநாயகம் நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அமலாக்கத்துறை சோதனையை எதிர்கொள்ள தயார் எனவும் கூறினார்.