புதுடெல்லி ஜூலை, 19
பட்டியல் மற்றும் பழங்குடியின ஜாதி மக்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த விஜய் சம்பலா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2024 இல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலையொட்டி அவருக்கு பாஜகவில் அமைப்பு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இது குறித்து தகவல் அளித்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.