புதுடெல்லி ஜூலை, 18
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரன் 3 விண்கலம் இரண்டாம் சுற்று பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள twitter பதிவில், அடுத்த இரண்டு வாரங்களுக்கு சந்திராயன் 3 புவி சுற்றுப்பாதையில் சுற்றி வரும் தூரம் படிப்படியாக உயர்த்தப்பட்டு ஆகஸ்ட் ஒன்றில் நிலவின் ஈர்ப்பு விசைக்குள் உந்தி தள்ளப்படும் என பதிவிடப்பட்டுள்ளது.