புதுடெல்லி ஜூலை, 18
நாட்டில் பல்வேறு இடங்களில் 1.44 லட்சம் கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், போதை பொருட்கள் ஒழிப்பு போராட்டத்தில் ஒரு பகுதியாக மத்திய பிரதேசத்தில் 1,03,884 கிலோ, உத்தரப்பிரதேசத்தில்4,049 கிலோ, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.2,416கோடி மதிப்புள்ள போதை பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.