புதுடெல்லி ஜூலை, 16
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திராயன் மூன்று விண்கலம் முதல் சுற்றுப் பாதையை உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்,LVM-3-M-4 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட சந்திரன் மூன்று மின்கலம் நிலை இயல்பாக உள்ளது. விண்கலம் இப்போது 41,762 கிமீ × 123 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் உள்ளது என பதிவிட்டுள்ளது.