சென்னை ஜூலை, 17
மணிப்பூர் மக்களை ஜாதி, மதமாக பிரித்து கலவரத்தை தூண்டும் சதி வேலைகளை மத்திய பாஜக அரசு தான் செய்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், மணிப்பூரின் மக்கள் தொகை 35 லட்சம் தான் குறைந்த அளவிலான மக்கள் தொகை கொண்ட அம்மாநிலத்தில் நடக்கும் கலவரத்தை பெரிய இராணுவத்தை வைத்திருப்பதாக பேசும் அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை என்றார்.