மும்பை ஜூலை, 16
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான தாராவில் மேம்பாட்டு திட்டம் அதானி குடும்பத்திடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ல் நவம்பர் மாதம் மேம்பாட்டு திட்டத்திற்காக டெண்டர் விடப்பட்டபோது அதிகபட்சமாக ரூ.5,609 கோடிக்கு அதானி குழுமம் டெண்டர் கோரியதாக அறிய முடிகிறது. இதனை அடுத்து 640 ஏக்கரில் அமைய உள்ள அடுக்குமாடி வீடு கட்டிக் கொடுக்கும் திட்டப் பணியை அதன் குழுமம் மேற்கொள்ள உள்ளது.