அமெரிக்கா ஜூலை, 9
அமெரிக்காவின் நவாடா வாகனம் லாஸ்வேகஸ் நகரில் இருந்து கலிபோர்னியாவுக்கு ஆறு பயணிகளுடன் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானது. நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து மிருடோ விமான நிலையம் அருகே உள்ள விளை நிலத்தில் விழுந்து தீப்பற்றி எரிந்தது. இதில் விமானத்தில் இருந்த ஆறு பேரும் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.