புதுடெல்லி ஜூலை, 7
ஆளுநர் ரவி இன்று மாலை டெல்லி புறப்பட்டு செல்கிறார். 13ம் தேதி வரை அவர் டெல்லியில் தங்கி இருந்து பல தலைவர்களை சந்திப்பார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜியின் பதவி நீக்க அறிவிப்பை நிறுத்த வைத்திருக்கும் நிலையில் நாளை டெல்லி செல்கிறார். அங்கே இது தொடர்பாக சட்ட ஆலோசகர்களுடன் ஆளுநர் ஆலோசனை செய்வார் என்று தெரிகிறது. அதோடு அமித்ஷாவை சந்தித்து பேசுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது.