சென்னை ஜூலை, 8
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ரேஷன் கடைகளில் நடத்தப்படும் முகாம்களில் விண்ணப்பிக்கும் போது பெண்களுக்கான உதவித்தொகை திட்டங்களுக்கு என்னென்ன ஆதாரங்கள் தர வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப அட்டை எண் ஆதார் எண், தொலைபேசி எண், புகைப்படம், வயது, மாவட்டம், தொழில், வாடகை வீடா சொந்த வீடா என்பது குறித்த விபரம், நிலம் வைத்திருப்பவரா, வாகனம் வைத்துள்ளவரா, வங்கி கணக்கு எண், உறுதிமொழி ஆகியவை வழங்கிட வேண்டும் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.