மும்பை ஜூலை, 7
ஐடி சட்டத்திருத்தத்தை சரியாக செயல்படுத்தவில்லை என்றால், அதுவே சட்டவிரோதமாகிவிடும் மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. எடிட்டர்ஸ் கில்ட் தொடுத்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், சட்ட திருத்தங்கள் தற்போதைய நிலையில் ஏன் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல் மத்திய அரசு ஏன் மௌனமாக உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளது.