வேலூர் ஜூலை, 3
மத்திய அரசின் கூட்டுறவு சட்ட திருத்த மசோதா நிறைவேறினால் மாநில அரசின் உரிமை பறிக்கப்படும் என்று சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார். வேலூரில் பேசியவர் மெஜாரிட்டி இருக்கும் காரணத்தினால் பாரதிய ஜனதா கட்சி எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைக்கிறது அனைத்து அதிகாரமும் தங்கள் கையில் இருக்க வேண்டும் என மோடி தலைமையிலான அரசு விரும்புகிறது. சர்வாதிகாரப் போக்கில் நடந்து கொள்கிறது என்றார்.